• このページはTamilで表示されています。 オフィシャルサイト [JP]
  • This page is displayed in ‘Tamil’. Official web site [EN]

ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ்- உலகளாவிய இணையதளம்

ஜப்பானிய மற்றும் பிற ஆசியச் சந்தைகளில் நுழைய விரும்பும் கடல்கடந்து மேற்கொள்ளப்படும் தொழில்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ் வழங்குகிறது. இணையம் மற்றும் வரைகலை வடிவமைப்பு போன்ற சந்தைப்படுத்தும் பொருட்கள் சார்ந்த சேவைகள் அல்லது மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்கம் போன்ற மொழி சார்ந்த சேவைகள் அல்லது இந்தப் பிரிவுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மனித வளங்களை அறிமுகப்படுத்தும் பணியமர்த்தும் சேவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களுடைய தொழில் சார்ந்த தகவல் தொடர்புத் தேவைகளை எங்களிடம் விட்டுவிடுங்கள்.

  • இணைய வடிவமைப்பு
    உங்களுடைய தொழிலை ஜப்பானிய மற்றும் பிற ஆசியச் சந்தைகளில் விரிவுபடுத்த ஒரு செயல்திறன் வாய்ந்த இணைய தளமானது அத்தியாவசியமான கருவியாக இருக்கிறது. குறிப்பாக ஆசியச் சந்தைகளுக்கு ஏற்ற இணையதளத்தை உருவாக்கத் தேவையான ஆதரவை ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ் அளிக்கிறது.
  • வரைகலை வடிவமைப்பு
    ஆசியாவில், குறிப்பாக ஜப்பானில் உங்களுடைய நிறுவனத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறு வெளியீட்டால் ஒரு தொழில் சார்ந்த சந்திப்பையோ அல்லது அதற்கான வாய்ப்பையோ உருவாக்கமுடியும்.
  • மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளூர்மயமாக்கல்
    ஆசிய மொழிகளை உலகுக்கும், உலகத்தின் மொழிகளை ஆசியாவுக்கும் கொண்டு சேர்த்தல். உலகத்தின் அனைத்து மூலைகளிலும் உள்ள உள்ளூர் ஊழியர்களின் வலையமைப்பு ஒன்றைப் பயன்படுத்தி, ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ் உயர்தரமான மொழிபெயர்ப்புகளை அளித்து உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை விரிவடைய செய்வதில் உதவி புரிகிறது.
  • பொருள் விளக்கம்
    ஜப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகளில் தொழில் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது இரண்டு மொழிகளிலும், கலாச்சாரங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு பொருள் விளக்கம் அளிப்பவரின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது. கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்ளுடைய பொருள்விளக்கம் அளிப்பவர்கள் மற்ற சந்தைகளில் உங்கள் தொழில் சார்ந்த வெற்றிக்கு ஒரு சாவியாக விளங்குகின்றார்கள்.
  • ஊழியர்களைப் பணியமர்த்தும் சேவை/பணியமர்த்தம்
    "ஜப்பான் தொழில் சூழலில் அனுபவம் கொண்ட ஊழியர்கள் எனக்குத் தேவைப்படுகிறார்கள்," " தகவல் தொடர்பு சுமூகமாக இருப்பதை உறுதி செய்ய எனக்கு இரண்டு மொழிகள் தெரிந்த ஊழியர் உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள்." இதை நீங்கள் கூறுவது போல் உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களின் பணியமர்த்தம் சார்ந்த ஆதரவை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ்- ஐ அறிமுகம் செய்தல்

அமைவிடம்ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ் ஆசியாவின் மையப்பகுதியான டோக்கியோ தொழில் மாவட்டத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட சிறப்பான அமைவிடத்திலிருந்து, நிறுவனத்தின் பண்பட்ட தகவல் தொடர்பு சேவைகள் மேற்கொள்ளப்படுவதால் அதனுடைய வாடிக்கையாளர்கள் மட்டத்தில் உயர்ந்த மரியாதையைப் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் வரலாறு1996இல் தன்னுடைய தொழில் நடவடிக்கைகளைத் தொடங்கிய ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ், 2005இல் ஒரு புதிய நிறுவனமாகப் பிரிந்தது. டோக்கியோ போன்ற போட்டிகள் நிறைந்த தொழில் சூழலில் நிலையாக அணிவகுத்து நிற்கும் தகவல் தொடர்பு சேவைகளை அளிக்க இயலும் எங்களுடைய திறமையே எங்களுடைய சிறந்த தன்னம்பிக்கை மற்றும் பெருமிதம் ஆகியவற்றின் ஆதாரமாக விளங்குகிறது.
கூட்டாண்மைக்குரிய தத்துவம்ஜப்பான் மற்றும் ஆசியாவில் உலகளாவிய தொழில்களின் வெற்றிக்கு நேரடியாக ஆதரவு அளிக்கும் சேவைகளை ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ் ஆகிய நாங்கள் வழங்குகிறோம்.
ஆசியத் தொழில் சந்தைகளில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில் சார்ந்த தகவல் தொடர்பு வல்லுநர்களாகிய நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் கவர்ந்திழுக்க முயற்சி செய்யும் சந்தைகளின் தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் முழுமையான தீர்வுகளை அவர்களுக்கு அளிக்கிறோம்.
எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தொழிலில் வெற்றி காண்பதே எங்களுடைய தலையாய குறிக்கோள் ஆகும் மற்றும் இதுவே எங்களுக்கு மிகவும் அதிகமான மன நிறைவு அளிப்பதாகும்.
மிகப்பெரிய வாடிக்கையாளர்கள்ஜப்பானிலும், ஆசியாவிலும் மற்றும் உலக அரங்கிலும் நன்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானிலும், பிற ஆசியச் சந்தையிலும் நுழைய எண்ணிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஆகியவையே எங்களுடைய வாடிக்கையாளர் கூட்டத்தில் பெருமளவு உள்ளன.
முக்கியமான வாடிக்கையாளர்கள்
GE குழுமம், HP குழுமம், சோனி குழுமம், NTT குழுமம், யூனிலெவர், சிக்மா-ஆல்ட்ரிச், ஈசை, கேனான், கிரின் குழுமம், எர்ன்ஸ்ட் & எங்க் ஷின்நிகான், சோஜிட்ஸ் குழுமம், டைமண்ட், நிசான் மோட்டார், ஆசிய-ஜப்பான் மையம், ஜப்பான் வெளி வணிக நிறுவனம்(JETRO), டோக்கியோ பல்கலைக்கழகம், வசீடா பல்கலைக்கழகம் மற்றும் பல.
ஆர்க் கம்னியூக்கேஷன்ஸ் இங்க்.
தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர்: மரிக்கோ ஓசேட்டோ
முகவரி: 7வது தளம். மோரிடன் கட்டிடம். 3-9-9 மிட்டா, மினாட்டோ-கு, டோக்கியா 108-0073
தொலைபேசி: 81-3-5730-6133
மின்நகல்: 81-3-5730-6134
மின்னஞ்சல்:arc-c@arc-c.jp
  • 日本語でのお問い合わせはこちら お問い合わせ [JP]
  • For inquiries in English, click Contact Us [EN]